19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூலிகை உணவுப் பொருட்கள் கண்காட்சி: புதுமடம் பூன் மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பான பங்கேற்பு.!

மூலிகை உணவுப் பொருட்கள் கண்காட்சி: புதுமடம் பூன் மழலையர் பள்ளி மாணவர்கள் சிறப்பான பங்கேற்பு.!

எழுதியவர்: Baker BAker April 7, 2026, 8:35 pm

ரெகுநாதபுரம் நாகா மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற கலாம் வேர்ல்ட் ரெகார்ட் நிகழ்ச்சியில், 300-க்கும் மேற்பட்ட மூலிகைகள் மற்றும் இயற்கைச் சார்ந்த உணவுப் பொருட்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் புதுமடம் பூன் மழலையர் பள்ளியின் சார்பாக சிறுவர், சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்று அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் இராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர்  ரெஜினி , மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்)  ஜெயந்தி , பாரம்பரிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நடேசன் சின்னையா (புதுக்கோட்டை) மற்றும் கலாம் வேர்ல்ட் ரெகார்ட் ஒருங்கிணைப்பாளர் குமாரவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியை கோவர்தினி அவர்கள், குழந்தைகள் தயாரித்த உணவுப் பொருட்களை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!