19 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் கீர்த்திகா முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.!

திருவாடானையில் கீர்த்திகா முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பு.!

எழுதியவர்: Baker BAker April 5, 2026, 8:12 am

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதன்படி, திருவாடானை தொகுதிக்குட்பட்ட ஓம் சக்தி நகர், பாரதிநகர், மகா சக்தி நகர், பட்டண காத்தான் நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு தோறும் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

வாக்காளர்களுடன் நேரடியாக கலந்துரையாடிய அவர், தொகுதி வளர்ச்சி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், பொதுமக்களின் குறைகளை கவனமாக கேட்டு, தீர்வு காண உறுதி தெரிவித்துள்ளார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு உற்சாகமாக செயல்பட்டனர். இதனால் திருவாடானை தொகுதியில் தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!