25 May 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » யானையின் காதில் புகுந்த எறும்பின் நிலை! ஈரான் VS இஸ்ரேல் போர்..

யானையின் காதில் புகுந்த எறும்பின் நிலை! ஈரான் VS இஸ்ரேல் போர்..

எழுதியவர்: Askar March 16, 2026, 5:19 am

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் யுத்தம் 15 நாட்களாக எந்த முடிவுக்கும் வராமல் இரண்டு நாடுகளும் குண்டுகளால் சிதைக்கப் பட்டு இரத்த பூமியாக காட்சியளிக்கிறது. உண்மையில் அங்கு கள நிலவரம் எப்படி உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ தாக்குதல்களை ஈரான் எப்படி சமாளிக்கிறது.

கடந்த 13 நாட்களில் அமெரிக்கா 6000 மேற்பட்ட குண்டுகளை வீசி (ஒவ்வொன்றும் சுமார் 1000 பவுண்டுகள்) ஈரானை தகர்த்துள்ளது. சுமார் 12000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாக சிதைந்துள்ளது. 50% க்கும் மேற்பட்ட கடற்படை சொத்துக்கள் மற்றும் 80% வரை வான்வழி சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது .போரில் ஈரானின் தலைவர் மற்றும் 40 முக்கிய தளபதிகள் உட்பட 1,900 முதல் 3,500 குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல்களால் அமெரிக்கா இஸ்ரேல் ராணுவத்திற்கு வெற்றி கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. பில்லியன் கணக்கான செலவில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை இழந்து உள்நாட்டில் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது அமெரிக்கா. இவ்வளவு இழப்புகளை சந்தித்தபோதும் ஈரான் ராணுவம் செயலிழந்து விட்டதா என்றால் அதுவும் இல்லை. ஈரானின் IRGC ராணுவம் எதிரியை துவம்சம் செய்யக்கூடிய அளவுக்கு மிகவும் வலிமையுடன் உள்ளது.

IRGC ராணுவம் நிர்வாக ரீதியாகவும் , ராஜதந்திர போர் உத்திகளை செயல்படுத்துவதிலும் அமெரிக்காவிற்கு பாடம் கற்று கொடுக்கிறது. மத்திய கிழக்கில் அமெரிக்க கண்காணிப்பில் 80% ஐ ஈரான் செயலிழக்கச் செய்துள்ளது, உலகில் 50% THAAD இடைமறிப்பான்களை (4/8), உக்ரைன் போரின் 4 ஆண்டுகளிலும் பயன்படுத்தப்பட்ட இடைமறிப்பான்களின் எண்ணிக்கையை விட 1.5 மடங்கு குறைந்துள்ளது. ஈரான் அமெரிக்கப் படைகளை அரபு நாடுகளில் உள்ள அவர்களின் அனைத்து விமானத் தளங்களிலிருந்தும் வெளியேற்றியுள்ளது .இரும்புக் குவிமாடம் என்று அழைக்கப் படுகிற அயன்டோம் மற்றும் தாட் , கட்டுக்கதையை ஈரான் தகர்த்துள்ளது இது அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் மிக மோசமான பாதிப்பு.

கடந்த 13 நாட்களில் டெல் அவிவ் நகரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் குவிந்துள்ளனர், சொத்துக்களுக்கு பெரும் சேதம், அழுத்தம் மற்றும் பதற்றம், மன அதிர்ச்சி, மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம். குறைந்தது 3,000 இஸ்ரேலியர்கள் இறந்துள்ளனர். ஏற்கனவே 11,000 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஈரானால் அழிக்கப்பட்டுள்ளன .

ஈரானின் ராஜதந்திர நடவடிக்கையில் ஒன்றான ஹார்முஸ் சலசந்தி மூடல் ஈரானுக்கு மிகப்பெரிய அந்நியச் செலாவணியைக் கொண்டு வந்துள்ளது, அமெரிக்கா மீது உலக நாடுகள் பெரும் அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த 10 நாட்களில் உலகளாவிய பங்குச் சந்தைகள் மொத்தம் $7.25 டிரில்லியன் இழப்பைக் கண்டுள்ளன .மத்திய கிழக்கு சொத்து NAV விலைகள் கடந்த 10 நாட்களில் 37% சரிந்துள்ளன .எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உலக நாடுகள் அலறுகின்றன.

“நான் கீழே சென்றால், நான் முழு உலகத்தையும் கீழே கொண்டு வருகிறேன்” என்ற ஈரானின் தந்திரம் இதுவரை சிறப்பாக செயல்படுகிறது. பல திறன்களைத் தன கைவசம் வைத்துள்ள ஈரான் ட்ரோன் போர்,  பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதல் திறன்கள், கடலுக்கடியில் சிறப்பான செயல்பாடுகள்,என ஒரு இராணுவ சக்தியாக கிட்டத்தட்ட முழுமையான சண்டை திறன்கள் கொண்ட முழு நாடாக ஈரான் வளர்ந்துள்ளது.

இந்த யுத்தம் நாம் அடிக்கிற அடியில் ஈரான் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிவிடும் என்ற டிரம்பின் முடிவு தப்புக் கணக்காக போனது. இது ஒரு சமச்சீரற்ற போர் மிகவும் சக்திவாய்ந்த எதிரிக்கு எதிராக, உயிர் வாழ்வதும் வலி மிகுந்த தாக்குதல்களை வழங்குவதும் தான் ஒருவர் செய்யக்கூடிய சிறந்த செயல்., ஈரான் உண்மையில் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது அடிக்கு அடி அடிப்படையில், ஈரான் ஒரு அடிக்கு 10 தாக்குதல்களைப் திரும்ப பெற்றாலும் இது உலகின் மிக சக்திவாய்ந்த எதிரியுடன் மோதுகிறோம் என்பதை ஈரான் மறக்கவில்லை. மொத்தத்தில் ஈரான் பெரும் இழப்பை சந்தித்தாலும் அது திரும்ப கொடுத்த அடியை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் ஏற்படுத்திய பொருளாதார இழப்பை மறக்க முடியாது. யானையின் காதில் புகுந்த எறும்பின் நிலை தான் இப்போது அமெரிக்காவிற்கு.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!