Iran Israel War LIVE: அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்! மத்திய கிழக்கில் பதற்றம்
எழுதியவர்: ஆசிரியர் March 1, 2026, 1:30 pm

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள பதற்றங்கள் அதிகரிக்கும் நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிரான முக்கிய போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த தாக்குதல்கள், அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹரான், இஸ்ரேலின் விமான தாக்குதலுக்கு இலக்காக உள்ளது. உலகளாவிய தாக்கங்கள் மற்றும் போர் நிலவரம் குறித்து நேரடி தகவல்களை வழங்கப்படுகின்றன. மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் மற்றும் இராணுவ நிலவரம், அங்கு உள்ள நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை பாதிக்கக்கூடும். இது, அந்த பகுதியில் புதிய சிக்கல்களை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது.



You must be logged in to post a comment.