ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2026, 11:31 am

மத்திய கிழக்கு பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. அமெரிக்கா ஈரானுக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், துருக்கியில் இருந்து ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு செல்லும் விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவில் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழலில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். மத்திய கிழக்கில் நிலவும் இந்த பதற்றம், அங்கு உள்ள அரசியல் நிலவரத்திற்கும், பாதுகாப்பு சூழலுக்கும் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.



You must be logged in to post a comment.