ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து.. உச்சக்கட்ட பதற்றத்தில் மத்திய கிழக்கு! போர் தொடங்கப்போகிறது
எழுதியவர்: ஆசிரியர் February 28, 2026, 9:31 am

மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் உச்சக்கட்ட பதற்றத்தின் காரணமாக, ஈரானுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்கா எப்போது ஈரானை தாக்கலாம் எனும் அச்சம் உருவாகியுள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து ஈரானின் தலைநகரான தேஹ்ரானுக்கு செல்லும் விமானங்கள் வெள்ளிக்கிழமை இரவில் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்க படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இடையூறுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் இந்த நிலைமை, அங்கு போர் தொடங்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.



You must be logged in to post a comment.