நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், விஜயின் மனைவி, சங்கீதா, தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கூறி, செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்திருக்கிறார்.
விஜய்யின் மனைவி, சங்கீதா தாக்கல் செய்த, விவாகரத்து வழக்கு, எழுபத்தி மூன்றின் கீழ், இரண்டாயிரத்தி இருபத்தி ஆறு, என்ற எண்ணாக, பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
விஜய் கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சங்கீதா விஜயின் ரசிகர் ஆவர். இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களகவே விஜய்- சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்த நிலையில் சங்கீதா அவர்கள் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இச்சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




You must be logged in to post a comment.