சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வாங்க நினைப்போருக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வருகிறது. அந்த வகையில் வார தொடக்க நாளான நேற்றுமுன்தினம் சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,18,880-க்கும், நேற்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனையானது.இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,440-க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 295 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-24-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,12023-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,88022-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,44021-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,44020-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-24-02-2026- ஒரு கிராம் ரூ.29023-02-2026- ஒரு கிராம் ரூ.30022-02-2026- ஒரு கிராம் ரூ.29021-02-2026- ஒரு கிராம் ரூ.29020-02-2026- ஒரு கிராம் ரூ.270
உயர உயர பறக்கும் தங்கம்: நகைப் பிரியர்கள் கடும் அதிர்ச்சி..
எழுதியவர்: Askar February 25, 2026, 10:27 am




You must be logged in to post a comment.