30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வத்தலக்குண்டுவில்  தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான, கிடா முட்டும் போட்டி.  150-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கலந்து கொண்டது.

வத்தலக்குண்டுவில்  தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான, கிடா முட்டும் போட்டி.  150-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கலந்து கொண்டது.

எழுதியவர்: Askar February 8, 2026, 9:17 pm
வத்தலக்குண்டுவில்  தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான, கிடா முட்டும் போட்டி.  150-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கலந்து கொண்டது.
வத்தலக்குண்டுவில் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற,   தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றான, கிடா முட்டும் போட்டியில்  150-க்கும் மேற்பட்ட கிடாக்கள் கலந்து கொண்டு, பரிசுகளை வென்றது.
திண்டுக்கல் மாவட்டம்,
வத்தலக்குண்டுவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி பிறந்தநாள் மற்றும் தமிழர் திருநாளை கொண்டாடும் விதமாக, சவுத் லயன்ஸ்
கிடா முட்டு நண்பர்கள் சங்கம் சார்பாக, இரண்டாம் ஆண்டு கிடா முட்டும்  திருவிழாவில்,  திண்டுக்கல், திருச்சி, பழனி,  பொள்ளாச்சி,  மதுரை, தேனி, உசிலம்பட்டி,  தேவாரம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, சுமார் 150-க்கு மேற்பட்ட   கிடாக்கள் கலந்து கொண்டது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு, கிடா முட்டும் போட்டி, சேவல் சண்டை என பல்வேறு விளையாட்டுகள் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில்,   வத்தலக்குண்டுவில் கிடா முட்டும் போட்டி சிறப்பாக  நடைபெற்றது.
இப்போட்டியில், சுமார் 150-க்கும் மேற்பட்ட  கிடாக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக களம் இறங்கியது.  போட்டியில், 6  கட பல் போட்ட,   கிடாக்கள் மட்டுமே கலந்து கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஒருமுறை  போட்டியில் கலந்து கொள்ளும் கிடா, மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. கடந்த, 30 நாட்கள் பயிற்சி பெற்ற கிடாக்கள்,  2 கிடா வீதம், ஒவ்வொரு  ஜோடி கிடாகளாக போட்டியில் கலந்து கொண்டது.
போட்டியில், 75 முட்டுக்கள் முட்ட வேண்டும். அப்படி  முட்டும்போது, உடல் சோர்வடைந்து, பின்வாங்கும்  கிடாக்கள் போட்டியிலிருந்து தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. போட்டியில், சுமார் 30 முதல் 40 முறை முட்டுகளுக்குள் சில கிடாக்கள் சோர்வடைந்து தோல்வியடைந்தது. ஒரு சில கிடாக்கள், 50 முதல் 55 முட்டுகள் முட்டி வெற்றி பெற்றது.
களத்தில் இறக்கப்பட்டு  வெற்றி பெறும் கிடாக்களுக்கு வத்தலகுண்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிலை நாற்றுகள் வழங்கப்பட்டது. மேலும், பீரோ, கட்டில்,  மெத்தை, சில்வர் அண்டா,  கேஸ் அடுப்பு, மிக்சி பொருள்கள் பரிசாக  வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக  செய்திருந்தனர்.   வத்தலகுண்டுவில் கிடா முட்டும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை வத்தலகுண்டு காவல்துறையினர்  செய்திருந்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!