இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர்கள் வந்த வாகனம் பரமக்குடி அருகே சில நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டது தொடர்பாக ஷிப்ரா பதக் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பாக திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு பரமக்குடி உட்கோட்டம்) தலைமையில் 3 தனிப்படையினர் அமைக்கப்பட்டு மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கிடைத்த வெவ்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஷிப்ரா பதக் கொடுத்த புகார் உண்மைக்கு புறம்பாக உள்ளது என தெரியவருகிறது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷிப்ரா பதக் கொடுத்த புகார் உண்மைக்கு புறம்பானது ! மாவட்ட காவல்துறை தகவல் !!
எழுதியவர்: Baker BAker March 11, 2024, 2:53 pm




You must be logged in to post a comment.