03 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு கரோனா வைரஸ் தடுப்பு பொருட்களை டாக்டர்.கம்பன் வழங்கினார்…

செங்கம் அருகே தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு கரோனா வைரஸ் தடுப்பு பொருட்களை டாக்டர்.கம்பன் வழங்கினார்…

எழுதியவர்: Askar April 13, 2020, 10:20 am

செங்கம் அருகே தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு கரோனா வைரஸ் தடுப்பு பொருட்களை டாக்டர்.கம்பன் வழங்கினார்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றிய நகர திமுக சார்பில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுப்பாளையம் டவுன் பஞ்சாயத்து தூய்மைப் பணியாளர்கள் போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் கிருமிநாசினி மருந்து , சுபகர குடிநீர் உள்ளிட்ட பொருட் களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனரும் கலசபாக்கம் தேர்தல் பொறுப்பாளருமான டாக்டர். கம்பன் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளருக்கு முத்து கவசம், கையுறை, கிருமிநாசினி ஆகியவற்றை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில் ,உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தேவையில்லாமல் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் .வீட்டில் இருந்து வெளியே சென்று வருபவர்களை முக கவசம் ,கையுறை அணிந்து சென்று வீடு திரும்பியவுடன் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் நகர ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி பிரகாஷ் புதுப்பாளையம் ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!