01 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » சந்திப்பு » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » சமூக ஆர்வலர் குணா தோழரின் குடும்ப விழா.!

சமூக ஆர்வலர் குணா தோழரின் குடும்ப விழா.!

எழுதியவர்: Baker BAker June 1, 2026, 8:15 am

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குணசேகரன் (குணா) – சித்ரா தம்பதியினரின் மகள் தாரணியின் சீர் நிகழ்ச்சி இன்று மேட்டுப்பாளையம் சேரன் மஹால் திருமண மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு தாரணிக்கு வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மேலும், சி.ஐ.டி.யு. பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் இயக்கத் தோழர்களும் கலந்து கொண்டு மணமகளை வாழ்த்தியதுடன், குணசேகரன் குடும்பத்தினருக்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த சூழலில் நடைபெற்ற இந்த குடும்ப விழா, சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் அன்பான வரவேற்பால் அனைவரின் பாராட்டையும் பெற்றது. கலந்து கொண்டோர் மணமகளின் எதிர்கால வாழ்க்கை வளமுடன் அமைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!