02 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் மகளிர் தின விழா: பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்..

ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் மகளிர் தின விழா: பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் March 10, 2020, 8:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்ன ஏர்வாடியில் சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி தலைமை வகித்தார். கீழக்கரை பேடு தொண்டு நிறுவன கிராமப் பணியாளர் அபிராமி வரவேற்றார். வேம்பார் பேடு தொண்டு நிறுவன செயல் இயக்குநர் புஷ்பராயன் விளக்கவுரை ஆற்றினார்.

இராமநாதபுரம் இன்னர் வீல் சங்க சங்கத் தலைவி கவிதா செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். பெண்களின் முன்னேற்றம் குறித்து சமூக ஆர்வலர் அமுத ஜோதி, ஏர்வாடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பவித்ரா, கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி மேலாண் துறை தலைவர் பேராசிரியை விமலி,  சின்ன ஏர்வாடி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் பேசினர். மகளிரின் சிறப்பு, பல்வேறு துறைகளில் பெண்களின் சாதனை பற்றி பள்ளி குழந்தைகள் பாடல் பாடினார்.

பெண்களின் ஆரோக்கியம், குடும்ப நலனே சமூக நலன், ஆண் குழந்தை வளர்ப்பு குறித்து இன்னர் வீல் சங்க தலைவி கவிதா செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். பண்டைய இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை, விடுதலைக்கு பின் பெண்கள் முன்னேற்றத்திற்கு அரசு வழங்கியுள்ள பல்வேறு சட்டங்கள் குறித்து  மாவட்ட நீதிபதி மகிழேந்தி விரிவாக பேசினார். இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு,  பேடு நிறுவனம், சில்ரன்ஸ் பிலீவ், பிரீடம் ஆகியன  விழா ஏற்பாடுகளை செய்திருந்தினன்.

கிராம பெண்கள் தலைவர் செல்லம்மாள், கடலாடி வட்டத்தைச் சேர்ந்த மீனவ மகளிர் உள்பட 200க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். சின்ன ஏர்வாடி மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவி முத்துராணி நன்றி கூறினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!