02 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது.

உசிலம்பட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது.

எழுதியவர்: mohan January 30, 2020, 4:04 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ராஜாக்காபட்டியில் ஊராட்சி மன்றத்துணைத்தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் வார்டுமெம்பர்கள் மறைமுக தேர்தலில் வாக்களித்து ஜெயப்பிரியா ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் அமமுகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல் மேக்கிழார்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக அதிமுகவைச் சேர்ந்த லெட்சுமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.; கீரிபட்டி ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஜெகன் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். இதேபோல் கோவிளாங்குளம் ஊராட்சியில் சுமதி துணைத்தலைவராக தேர்வாகியுள்ளார்.

எழுமலை அருகே மேலத்திருமாணிக்கம் உசிலம்பட்டி அருகே ஆத்தங்கரைப்பட்டி கிராமத்திலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வராததால் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!