கோவை தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற தேசிய தன்னார்வ ரத்த தான விழாவில் சிஐடியு நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்த தான விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேட்டுப்பாளையம் பகுதியில் பல்வேறு சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு, மனிதநேய அடிப்படையில் ரத்த தான சேவையை தொடர்ந்து முன்னெடுத்து வந்தவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் ரத்த தானம் வழங்கி, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் சமூகப் பணியில் பங்களிப்பு செய்ததற்காக சிஐடியு பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகளான தோழர் குணா, ஷானவாஸ், அபிபுல்லா, அப்துல் ரஹ்மான், தமிழன் அக்பர் சித்திக் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
ரத்த தானம் என்பது ஒரு உயிரைக் காப்பாற்றும் உன்னதமான மனிதநேயச் செயலாகும். அந்த வகையில், தொடர்ந்து ரத்த தானம் வழங்கி சமூக நலனில் பங்காற்றி வரும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிஐடியு நிர்வாகிகளின் சேவையைப் பலரும் பாராட்டினர்.




You must be logged in to post a comment.