கடைகளுக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் – தொடர்ந்து கண்காணிப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையைத் தடுக்கும் வகையில் நகராட்சி சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் சாலையில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 490 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், விதிமீறலில் ஈடுபட்ட கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.35,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்தச் சோதனையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் கலைவேந்தன், நகராட்சி சுகாதார அலுவலர் சுரேஷ்குமார், சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர், சுகாதார மேற்பார்வையாளர்கள் கார்த்திகேயன், பத்திரப்பன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்றும், விதிகளை மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.




You must be logged in to post a comment.