20 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தங்கம் வாங்க தங்கமான நேரம்! சர சரவென குறைந்தது! இன்னும் குறையும் வாய்ப்பு உள்ளது.?

தங்கம் வாங்க தங்கமான நேரம்! சர சரவென குறைந்தது! இன்னும் குறையும் வாய்ப்பு உள்ளது.?

எழுதியவர்: Askar November 18, 2026, 10:43 am

ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து, ரூ.12,215-க்கும், பவுனுக்கு ரூ.2,040 குறைந்து, ரூ.97,720-க்கும் விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சா்வதேச சந்தை விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறக்குமதி வரிகள் மற்றும் உள்ளூா் நகை வியாபாரிகள் சங்கத்தின் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டாகவே தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதி சென்னையில் தங்கத்தில் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பவுன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.12,515 ஆகவும், ஒரு பவுன் ரூ.1,00,120 ஆகவும் உயா்ந்தது. ஜன. மாத இறுதியில் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.1.25 லட்சத்துக்கும் மேல் உயா்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. ஜன.29-இல் அதிகபட்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.16,800-க்கும் ஒரு பவுன் ரூ.1,34,400-க்கும் விற்பனையானது.
கடந்த 10 மாதங்களில் மட்டும் சுமாா் 25 சதவீதம் வரை தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.13,385, பவுன் ரூ.1, 07, 080 வரை உயா்ந்திருந்த தங்கம் விலை கடந்த 6 நாள்களில் மட்டும் கிராமுக்கு ரூ. 785-ம், பவுனுக்கு ரூ.6,280 வரை குறைந்துள்ளது.

கடந்த 8-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13,160-க்கும், பவுன் ரூ.1, 05, 280-க்கும் விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் ரூ.12,615-க்கும், பவுனுக்கு ரூ.1,00,920-க்கும், திங்கள் கிழமை (நவ.16) கிராமுக்கு ரூ.75 குறைந்து, ரூ.12,540-க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320-க்கும் விற்பனையானது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!