16 November 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » புகையிலை பொருட்கள் கடத்தி வந்த மூவர் கைது..

புகையிலை பொருட்கள் கடத்தி வந்த மூவர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik November 15, 2026, 12:33 pm

பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்சில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 2,600 மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி மாவட்டம், பெங்களூரில் இருந்து தென்காசிக்கு வரும் ஆம்னி பேருந்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக புளியங்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்தை மறித்து சோதனை செய்ததில் அதில் சுமார் 2 1/2 கிலோ எடை கொண்ட ரூபாய் 2,600/- மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் பேருந்தில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த பேருந்து ஓட்டுநர்களான TN புதுக்குடி கற்பக வீதி தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் சதீஷ் (வயது27), செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 27) மற்றும் பேருந்தின் கிளீனரான இடைகால் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் கபில் ராஜ் (வயது 21) ஆகிய 03 நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!