வீரவநல்லுர் தேர்வு நிலை பேரூராட்சி நிர்வாகத்துடன் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அறிவித்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் வீரவல்லூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்7-ல் முத்தாரம்மன் கோயில் முடுக்கு தெருவில் தொடர் மழையினால் மழை நீர்தேங்கி சுகாதார கேடு விளைவிக்கும் நோய் பரவும் நிலை உள்ளதாக பலமுறை மனு அளிக்கப்பட்டது. எந்த பலனும் இல்லாத நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் தேர்வு நிலை பேரூராட்சியை 28-10-26 அன்று காலை 10.00 மணிக்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் (E.O) இல்லாத நிலையில், பொறுப்பு செயல் அலுவலர் அழைத்ததின் பெயரில் பேரூராட்சி ஹெட் கிளார்க், சுகாதார ஆய்வாளர், பொறியாளர், மற்றும் அலுவலக பணியாளருடன் வீரவநல்லூர் எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் அசனார் தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சு வார்த்தை 15 நாட்களுக்குள் தற்காலிக வேலை செய்து முடிப்பதோடு, அதையொட்டி நிரந்தமாக மழைநீர் தேங்கி நிற்காமல் செல்வதற்கு உண்டான பணியை செய்வதற்கு ஒரு மாத கால அடிப்படையில் ஒர்க் ஆர்டர் வாங்கி செய்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். இதன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சு வார்த்தையின் போது, எஸ்டிபிஐ கட்சியின் நகர செயலாளர் பஷிர், நகர பொருளாளர் இப்ராஹிம், அம்பை சட்டப்பேரவை தொகுதி செயலாளர் இப்ராஹிம், எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் கே.பி சாகுல், மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் வீரை ஜன்னத், மகளிரணி அம்பை தொகுதி பொருளாளர் தீன். ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.