24 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊட்டியில் சுற்றுலாத் தளங்கள் மூடல்!மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

ஊட்டியில் சுற்றுலாத் தளங்கள் மூடல்!மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

எழுதியவர்: Baker BAker October 24, 2026, 5:28 pm

தொடர் மண் சரிவு, கனமழையால் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகள் வருவதைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு, சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பல்வேறு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் கட்டுப்பாடுகளையும் வெளியிட்டுள்ளார்.

 

தொடர் மண் சரிவு மற்றும் சாலைப் போக்குவரத்து பாதிப்புகள் காரணமாக, நீலகிரி மாவட்டத்திற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

 

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தின் முக்கிய மலைப்பாதைகளில் இரவு நேர வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாகச் சாலைகளில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழும் அபாயம் இருப்பதால், வாகன ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நீர்நிலைகள், விழும் நிலையில் உள்ள மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் மண் சரிவு ஏற்படக்கூடிய செங்குத்தான மலைப்பாதைகளுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அத்தகைய பகுதிகளில் வாகனங்களை இயக்கவோ, நிறுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

தற்போதைய மழை நிலவரம் மற்றும் சாலைப் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் வானிலை மற்றும் சாலை நிலவரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!