24 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!

எழுதியவர்: Baker BAker October 24, 2026, 11:17 am

ரூ.1.13 லட்சம் பறிமுதல் – ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெற்றதாக விசாரணையில் தகவல்; முக்கிய ஆவணங்களும் சிக்கின!

சிவகங்கை, அக். 24:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, ரொக்கப் பணம் மற்றும் ஜீ-பே மூலம் பெறப்பட்ட பணம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ஆம் தேதி மதியம் 3 மணியளவில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சங்கரராமன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன் மற்றும் ஜேசுதாஸ் உள்ளிட்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையின்போது, நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இரவு 7 மணி வரை நீடித்த சோதனையில், அலுவலகத்திலிருந்து ரூ.62,500 ரொக்கப் பணமும், ஜீ-பே வாயிலாகப் பெறப்பட்ட ரூ.50,500-ம் என மொத்தம் ரூ.1,13,000 பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோதனையின்போது முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய இந்த அதிரடி சோதனை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!