தென்னக இரயில்வேயில் முதன் முறையாக மதுரை – குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் காட்சி வடிவப் பெட்டி (விஸ்டாடோம் பெட்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கான வரவேற்பு நிகழ்வில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கலந்து கொண்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.



மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை எழில்மிக்க செங்கோட்டை முதல் புனலூர் வரையிலான வழித்தடத்தில் இயங்கும் இந்த இரயிலில் காட்சிப் பெட்டிகள் இணைக்கப்பட்டு, மூன்று மாதம் சோதனை ஓட்டத்தை 22.10.2026 அன்று தென்னக ரயில்வே துவங்கியது. இந்த ரயிலுக்கு ரயில் நிலையத்தில் பயணிகள் நலச்சங்கம் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் தென்காசி எம்.பி. டாக்டர் ராணி ஸ்ரீகுமார் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் மா.செல்லதுரை, ஆறுமுகச்சாமி, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீப், செங்கோட்டை ரஹீம் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஸ்டாடோம் (கண்ணாடி பெட்டி) ரயில் குறித்த முக்கிய விவரங்கள்:
வண்டி எண் 16327 (மதுரை-குருவாயூர்): வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த விஸ்டாடோம் பெட்டியுடன் இயங்கும்
வண்டி எண் 16328 (குருவாயூர்-மதுரை): வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் இந்த பெட்டியுடன் இயங்கும்.
விஸ்டோம் சேவை 2026 அக்டோபர் 22 முதல் 2027 ஜனவரி 15 வரை சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது.
விஸ்டோம் ரயில் பயணத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள், குகைகள், மலைப்பாதைகள் மற்றும் அருவிகளின் அழகை பகல் வெளிச்சத்தில் கண்டுகளிக்கலாம்.
மேலும், பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வளைவுப் பாலத்தின் மீது ரயில் செல்லும் போது விஸ்டாடோம் பெட்டியில் இருந்து பார்ப்பது ஒரு அரிய அனுபவமாகும்.
பாலருவி, கழுதுருட்டி அருவி, தென்மலை சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் மற்றும் தென்காசி குற்றாலம் போன்ற பகுதிகள் இந்த வழித்தடத்தின் அருகே அமைந்துள்ளன.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான இந்த அழகிய மலைப்பாதை பயணத்திற்கு பயணிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.




You must be logged in to post a comment.