21 October 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » சில இரயில்கள் பல நிறுத்தங்கள்; சென்னை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு..

சில இரயில்கள் பல நிறுத்தங்கள்; சென்னை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு..

எழுதியவர்: Askar October 21, 2026, 8:45 am

டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே அக்டோபர் 16 அன்று முன்பதிவில்லா சிறப்பு அதிவிரைவு ரயிலை இயக்க உள்ளதாக தென்மேற்கு ரயில்வே, சார்பில் அறவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் கூடுதல் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இயக்கப்படும இந்த சிறப்பு சேவை கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், இரு மார்க்கங்களிலும் தலா ஒரு ரயிலாக இயக்கப்படும். மேலும், இரு ரயில்களும் ஒரே நாளில் தங்கள் பயணத்தை நிறைவு செய்யும் வகையில் அட்டவணை வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பெங்களூரு – சென்னை மற்றும் மறுமார்க்கம்: ரயில் நேரங்கள்.

ரயில் எண் 06587 பெங்களூரு கன்டோன்மென்ட் – டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், அக்டோபர் 16 காலை 7:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு, பிற்பகல் 3:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில், ரயில் எண் 06588 டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் – பெங்களூரு கன்டோன்மென்ட் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 4:10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 11:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் சென்றடையும்.

10 படுக்கை வசதி பெட்டிகள் (Sleeper) மற்றும் எட்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class) என இந்த ரயிலில் 18 பெட்டிகள் இருக்கும். இரு சேவைகளும் அக்டோபர் 16 அன்று மட்டுமே இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

பெங்களூரு – சென்னை ரயில் சேவை கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் மற்றும் பெரம்பூர் ஆகிய ஏழு நிலையங்களில் நிற்கும். மறுமார்க்கப் பயணத்தின் போது, இந்த ரயில் திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நிற்கும். சென்னைக்கு திரும்பும் பாதையில் பெரம்பூர் நிறுத்தம் சேர்க்கப்படவில்லை.பெங்களூரு – சென்னை ரயில் பாதையில் உள்ள நகரங்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் ஏறி இறங்க இந்த நிலையங்கள் வசதியாக இருக்கும்.

இந்தப் பண்டிகைக் காலத்தில் பெங்களூரு மற்றும் சென்னை இடையே பயணம் செய்ய பயணிகளுக்கு இந்த சிறப்பு சேவை ஒரு கூடுதல் தேர்வாக அமையும். வழியில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் நிறுத்தங்கள் உள்ளதால், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும். ஒரே நாளில் திரும்பும் இந்த ரயில் சேவை, பெங்களூருவுக்கு மீண்டும் செல்ல திட்டமிடுபவர்களுக்கு மற்றொரு நல்ல வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!