முதலமைச்சர் கோப்பை கோகோ பெண்கள் பிரிவில் சாம்பவர் வடகரை அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தென்காசி ஐசிஐசிஐ மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கோகோ விளையாட்டு போட்டி பெண்கள் பிரிவில் 50 பள்ளிகள் கலந்து கொண்டதில் சாம்பவர் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடத்தைப் பிடித்து வெற்றி பெற்றனர்.
போட்டியில் கலந்து கொண்ட 12 மாணவிகள் வங்கி கணக்கில் தலா ₹3000 வரவு வைக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ஆசிரிய ஆசிரியைகள் அலுவலக பணியாளர்கள் பெற்றோர் ஆசிரிய கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.