11 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா மற்றும் போதை சாக்லேட் வைத்திருந்த இருவர் கைது..

கஞ்சா மற்றும் போதை சாக்லேட் வைத்திருந்த இருவர் கைது..

எழுதியவர்: Abubakker Sithik September 11, 2026, 7:37 am

தென்காசி மாவட்டத்தில் போதை சாக்லேட் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இருவரிடமிருந்து ரூபாய் 85 ஆயிரம் மதிப்பிலான 01 கிலோ கஞ்சா, 01 கிலோ எடை கொண்ட 254 போதை சாக்லேட்டுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட காலாங்கரை பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல் துறையினர் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து செங்கோட்டை காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மேற்படி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட செங்கோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த திருமலை என்பவரின் மகன் சிவசுப்பிரமணியன் (வயது 30) மற்றும் செங்கோட்டை முத்துசாமி தெருவை சேர்ந்த பேச்சு நாதன் என்பவரின் மகன் பாஸ்கரன் (வயது 46) ஆகிய இரண்டு நபர்களை கைது செய்தனர்.

மேலும், இருவரிடமிருந்து ரூபாய் 85 ஆயிரம் மதிப்பிலான 01 கிலோ கஞ்சா, 01 கிலோ எடை கொண்ட 254 போதை சாக்லேட்டுகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி இரண்டு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!