10 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சியில் 4 வகை கழிவுகளை மூலத்திலேயே பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு தள்ளுவண்டி வழங்கல் நிகழ்ச்சி .!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 4 வகை கழிவுகளை மூலத்திலேயே பிரித்தெடுப்பது குறித்த விழிப்புணர்வு தள்ளுவண்டி வழங்கல் நிகழ்ச்சி .!

எழுதியவர்: Baker BAker September 7, 2026, 2:47 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில், பொதுமக்களிடையே 4 வகை கழிவுகளை மூலத்திலேயே பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு தள்ளுவண்டிகள் (Awareness Pushcarts) வழங்கும் நிகழ்ச்சி வார்டு 4 அலுவலகத்தில் நடைபெற்றது.

 

இதன் ஒரு பகுதியாக, வார்டு 13 – சங்கர் நகர் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு தள்ளுவண்டியை, மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் திருமதி. அமுதா அவர்கள் தொடங்கி வைத்து பயன்பாட்டிற்கு வழங்கினார்.

 

இந்த விழிப்புணர்வு தள்ளுவண்டியின் மூலம், மட்கும் கழிவு, மட்காத கழிவு, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்புக் கழிவு என 4 வகையான கழிவுகளை பொதுமக்கள் மூலத்திலேயே முறையாகப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து வீடு வீடாகவும், பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

 

நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் திரு. ரவிசங்கர், மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

“4 வகை கழிவுகளை பிரிப்போம் – தூய்மையான மேட்டுப்பாளையத்தை உருவாக்குவோம்” என்ற நோக்கத்துடன், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!