10 September 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் நகராட்சியில் தெருச்சுவர் அழகுபடுத்தும் பணிகள் தொடக்கம்.!

மேட்டுப்பாளையம் நகராட்சியில் தெருச்சுவர் அழகுபடுத்தும் பணிகள் தொடக்கம்.!

எழுதியவர்: Baker BAker September 7, 2026, 2:44 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் நகரின் அழகை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்களிடையே தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தெருச்சுவர் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி 5-வது வார்டு, சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள தெருச்சுவரில் வண்ணமயமான சுவர் ஓவியங்கள் வரையும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணிகள், மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் திருமதி. அமுதா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், சுகாதார ஆய்வாளர் திரு. ரவிசங்கர் அவர்களின் ஒருங்கிணைப்பில், நகராட்சி மேற்பார்வையாளர்கள் மற்றும் அனிமேட்டர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுப்புறத்தை தூய்மையாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோன்ற சுவர் ஓவியங்கள் மற்றும் அழகுபடுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தூய்மையான நகரம் – அழகான நகரம்” என்ற நோக்கத்துடன் நகராட்சி மேற்கொண்டு வரும் இம்முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!