தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் – ராஜபாளையம் சாலை ரயில்வே கேட் அருகே திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தில் திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பேருந்தை நிறுத்தியதும், அதில் இருந்த 56 பயணிகளும் அவசரமாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி உயிர் தப்பினர்.


இதனிடையே பேருந்தில் தீ வேகமாக பரவியதால், தகவல் அறிந்து காவல் துறையினரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சிக்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு : அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
பேருந்து இயக்கப்படும் முன் சரியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.
பழுதுகள் அனைத்தும் உடனுக்குடன் சரி செய்யப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.




You must be logged in to post a comment.