30 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநெல்வேலி சாந்தி நகர் “கிரைஸ்ட் சர்ச்” பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு..

திருநெல்வேலி சாந்தி நகர் “கிரைஸ்ட் சர்ச்” பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு..

எழுதியவர்: Abubakker Sithik August 30, 2026, 1:54 pm

பாளையங்கோட்டை சாந்தி நகர் “கிரைஸ்ட் சர்ச்” பள்ளியில் விதைப்பந்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து விதைப்பந்து புரட்சியை ஏற்படுத்தி வரும் வெங்காடம்பட்டி பூ.திருமாறன், பள்ளி குழந்தைகளுக்கு மத்தியில் விதைப்பந்து உருவாக்கும் முறை, அதன் அவசியம் குறித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் “கிரைஸ்ட் சர்ச்” நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் விதைப்பந்து பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை ரோசலின் சாந்தி தலைமை தாங்கினார். ஆசிரியைகள் வள்ளி சங்கரி, அன்னபூரணம், புனிதா, அமுதா, டெய்சி ராணி, எஸ்தர் மரிய சோபி முன்னிலை வகித்தனர். ஆசிரியை ஷெரன் ஞான சுஜி வரவேற்றார்.

நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விதைப்பந்து பிரச்சாரகர் வெங்காடம்பட்டி பூ.திருமாறன் கிரைஸ்ட் சர்ச் பள்ளி குழந்தைகளுக்கு விதைப்பந்து பற்றி விவரித்தார். மிக எளிதாகக் கிடைக்கும் வேப்ப முத்துக்களை சேகரித்து விதைப் பந்துகள் செய்யலாம் என தெரிவித்தார். பள்ளி மாணவ மாணவிகள் 25 விதைப் பந்துகளை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செய்து கொண்டு வந்தால் பாராட்டு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ரெவரெண்ட் ஜெயகுமார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோருடன் அம்பை காந்தி, ஹரிஹர செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் மா மரக்கன்றினை பள்ளி சார்பில் மாணவர் புது பெருமாள், மாணவி தங்க துர்கா ஆகியோர் நடவு செய்தனர். இறுதியில் ஆசிரியை எஸ்தர் ராஜாத்தி நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!