இராமநாதபுரத்தில் வாணி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜாபானு அளித்த புகாரின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் போலி ஆவணங்கள் மூலம் நில மோசடியில் ஈடுபட்டதாக 4 பேர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் ஜாபர் அலி, சந்திரகுமார், செந்தில்குமார் மற்றும் மகேஸ்வரன் @ பழனிக்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
ஹாஜாபானுவுக்குச் சொந்தமான சக்கரக்கோட்டை குரூப், சர்வே எண் 451/2-ல் உள்ள 80 சென்ட் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், மலேசியாவில் ஹாஜாபானு வழங்கியதாகக் காட்டும் போலி பவர் ஆஃப் அட்டார்னி தயாரிக்கப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. அந்த போலி ஆவணத்தை பயன்படுத்தி 8.18 சென்ட் நிலம் 2022ஆம் ஆண்டு ஜெசினா பேகம் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், மீதமுள்ள 71.82 சென்ட் நிலமும் 2025ஆம் ஆண்டு மற்றொரு நபருக்கு விற்பனை செய்தது போல் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் போலி மலேசியா பவர் ஆஃப் அட்டார்னி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றினர்.
குற்றவாளிகளை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், பாராட்டினார்.
வெளிநாட்டு பவர் ஆஃப் அட்டார்னி மூலம் சொத்து வாங்கும்போது ஆவணங்களின் உண்மைத்தன்மை மற்றும் சொத்து உரிமையை முறையாக சரிபார்க்க வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களது Passport, PAN Card உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் நகல்களை யாரிடமும் தேவையின்றி பகிர வேண்டாம் என்றும் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.




You must be logged in to post a comment.