23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாடியூர் புனித யோவான் இயேசு ஆலய திருவிழா..

வாடியூர் புனித யோவான் இயேசு ஆலய திருவிழா..

எழுதியவர்: Abubakker Sithik August 22, 2026, 12:58 pm

தென்காசி மாவட்டம் வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு பங்குத் தந்தை அருட்திரு லியோ தலைமை வகித்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி கொடியேற்றி ஆசி வழங்கினார். 

இந்நிகழ்வில், ஊர் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். பாளையங் கோட்டை அருட்திரு அருள் ஜோசப் மற்றும் கல்வெட்டாங்குழி பங்குத் தந்தை அமிர்த ராஜ சுந்தர் ஆகியோர் மறையுரை சிந்தனை ஆற்றினர். தொடர்ந்து 10 நவ நாட்களில் நற்செய்தி பெருவிழா, திருப்பலி, மறையுரை சிந்தனை, குணமளிக்கும் ஆராதனை, ஆடம்பர கூட்டுத் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வாக வரும் 29ம் தேதி சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு வாடியூரின் முதல் குரு அருட்திரு செல்வராஜ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடக்கிறது. இதில் திரளான இறைமக்கள் மற்றும் அன்பியங்கள் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை லியோ தலைமையில் தர்மகர்த்தா மைனர் ராஜ், கட்டளைதாரர் பிரான்சிஸ் பூண்டி மற்றும் இறை மக்கள் செய்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!