23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் சுபா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம்.!

மேட்டுப்பாளையம் சுபா மருத்துவமனையில் மாபெரும் ரத்ததான முகாம்.!

எழுதியவர்: Baker BAker August 21, 2026, 4:25 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சுபா மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும்  ரத்ததான முகாம், இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.

 

முகாமிற்கு சுபா மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் மகேஸ்வரன் மற்றும் டாக்டர் கலா மகேஸ்வரன் தலைமை வகித்தனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

ஸ்ரீகுமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சுகுணா, ரத்ததானத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய ஊக்குவித்தார்.

 

மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

 

அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக் குழுவினர் முகாமில் பங்கேற்று, தேவையான மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ரத்தக் கொடையாளர்களிடமிருந்து ரத்தத்தைச் சேகரித்தனர்.

 

ரத்ததானம் செய்த தன்னார்வலர்களுக்கு சுபா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

அவசரகால சிகிச்சைகள் மற்றும் ஏழை எளிய நோயாளிகளின் உயிரைக் காக்கும் உயரிய நோக்கத்துடன் இந்த ரத்ததான முகாம் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!