23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் புதிய கிளை திறப்பு.!

மேட்டுப்பாளையத்தில் அட்வான்ஸ்டு குரோ ஹேர் & குளோ ஸ்கின் கிளினிக் புதிய கிளை திறப்பு.!

எழுதியவர்: Baker BAker August 21, 2026, 2:25 pm

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சர்வதேச தரத்திலான தலைமுடி மற்றும் சருமப் பராமரிப்பு சிகிச்சைகளை வழங்கும் Advanced GroHair & GloSkin Clinic-இன் புதிய கிளை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் சரண்வேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், சவிதா மருத்துவமனை மகப்பேறு நிபுணர் டாக்டர் சசித்ரா தாமோதரன் வரவேற்றார். சவிதா மருத்துவமனை இயக்குநர் தாமோதரன், விஸ்வா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் உமா காளீஸ்வரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன் ரிப்பன் வெட்டி கிளினிக்கை திறந்து வைத்தார். செயலாளர் மோகன்தாஸ் மற்றும் நடிகை பாடினி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் பேசிய டாக்டர் மணிமேகலை மோகன், பெருநகரங்களில் கிடைத்து வந்த நவீன தலைமுடி மற்றும் லேசர் சரும சிகிச்சைகள் மேட்டுப்பாளையம் பகுதி மக்களுக்கும் கிடைப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

நிறுவனர் சரண்வேல் பேசுகையில், நிறுவனம் தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 160-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். புதிய கிளையில் PRP, GFC, லேசர் ஹேர் தெரபி, ஹைட்ரா ஃபேஷியல், கார்பன் லேசர் பீல், பரு மற்றும் தழும்பு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படுவதாக கூறினார்.

விழாவில் மருத்துவர்கள், ரோட்டரி மற்றும் இன்னர் வீல் சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் விஸ்வா மருத்துவமனை இயக்குநர் டாக்டர் கண்ணன் நன்றி தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!