ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் மதுரை தேசிய நெடுஞ்சாலையின் கிழக்குத் தெருவில், லீமாரோஸ் மார்ட்டின் ஹெல்த் செண்டர் கட்டிடத்திற்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானதாகக் கூறப்படும் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வேப்பமரம் வெட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விடுமுறை நாளை பயன்படுத்திக் கொண்டு சிலர் மரத்தை சட்டவிரோதமாக வெட்டி கடத்திச் சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மரத்தின் அடிப்பகுதியை மட்டும் விட்டுவிட்டு, மீதமுள்ள பகுதிகள் முழுவதுமாக வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அரசு சொத்துகள் மற்றும் சாலையோர மரங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறார்களா என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து உடனடியாக விசாரணை நடத்தி, மரம் வெட்டப்பட்டதற்கான உண்மை நிலையை கண்டறிந்து, தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களை பாதுகாக்க கண்காணிப்பை தீவிரப்படுத்தி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 20 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் வெட்டிய மர்ம நபர்.!
எழுதியவர்: Baker BAker August 20, 2026, 7:47 pm




You must be logged in to post a comment.