நிலக்கோட்டை தவெக எம்.எல்.ஏ., புதிய வழித்தடங்களுக்கு பேருந்தை தொடங்கி வைத்து இரண்டு கிலோ மீட்டர் தூரம் பேருந்தை இயக்கினார்..
நிலக்கோட்டை தவெக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார், புதிய வழித்தடங்களுக்கு சனிக்கிழமை பேருந்தை தொடங்கி வைத்தார். அவர், பேருந்தை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரே ஓட்டுநர் போல், பயணிகளுடன் ஓட்டி சென்றார்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதி தவெக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் தலைமையில் நிலக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்துசிலுக்குவார்பட்டி, கொங்கபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, கல்லடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் வழியாக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வரை செல்லும் புதிய பேருந்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போல வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து கண்ணாபட்டி, விராலிபட்டி, பண்ணப்பட்டி வழியாக விருவீடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை இணைக்கும் வகையிலும் இரண்டு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை ஆர்.அய்யனார் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதனையடுத்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்த அவர், தொடர்ந்து பேருந்தை தவெக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் அவரே சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை பயணிகளுடன் ஓட்டுநர் போல் பேருந்தை இயக்கினார். பின்னர், அவர் இயக்கிய பேருந்தில் பயணச்சீட்டு எடுத்து பயணம் செய்து கிராமங்கள் தோறும் சென்றார். அவருடன் சென்ற தவெக நிர்வாகிகளும் பேருந்தில் பயணச்சீட்டு எடுத்துக்கொண்டனர். நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டில் பேருந்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், நிலக்கோட்டை தவெக எம்.எல்.ஏ., ஆர்.அய்யனார் அவரே பேருந்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓட்டுனர் போல் ஓட்டிச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




You must be logged in to post a comment.