விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் சாலை மறியல்
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசைக் கண்டித்து, சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சிவராஜ் தலைமை தாங்கினார். தோழர் ராஜலட்சுமி, காரமடை நகர மன்ற உறுப்பினர் தோழர் பிரியா, சானவாஸ், ஹபிபுல்லா, முகமது அலி ஜின்னா, மகாலிங்கம், அப்துல் ரகுமான், லூயிஸ் ராஜா, நாகலட்சுமி, மல்லிகா, தௌலத் நிஷா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு பொது தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் தோழர் பாஷா கண்டன உரையாற்றினார். அப்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து, பின்னர் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.




You must be logged in to post a comment.