24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி to தாம்பரம் புதிய வந்தே பாரத் இரயில்; ராணி ஸ்ரீகுமார் எம்பி கோரிக்கை..

தென்காசி to தாம்பரம் புதிய வந்தே பாரத் இரயில்; ராணி ஸ்ரீகுமார் எம்பி கோரிக்கை..

எழுதியவர்: Abubakker Sithik August 7, 2026, 8:30 am

தென்காசி முதல் தாம்பரம் வரை விரைவில் புதிய வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்கவும், சங்கரன் கோவில் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் வலியுறுத்தினார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி மற்றும் தென்தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றும், ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் நேரில் சந்தித்து கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மனு அளித்தார்.

1. பெங்களூர் முதல் மதுரை வரை செல்லும் கண்டோன்மெண்ட் வந்தே பாரத் இரயிலை (20671/20672) தென்காசி வரை நீட்டிக்க வேண்டும்.

2. தாம்பரம் முதல் மதுரை வரை செல்லும் தேஜஸ் விரைவு இரயிலை (22671/22672) இராஜபாளையம் வரை நீட்டிக்க வேண்டும்.

3. கோயம்புத்தூர் முதல் மதுரை வரை செல்லும் இரயிலை (16721/16722) செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும்.

4. செங்கோட்டை முதல் தாம்பரம் வரை சிலம்பு விரைவு இரயிலை (20681/20682) LHB பெட்டியுடன் தினசரி இயக்க வேண்டும்.

5. கொல்லம் முதல் தாம்பரம் செல்லும் கொல்லம் விரைவு இரயிலில் (16101/16102) மூன்று முன்பதிவற்ற பெட்டிகளை இணைக்க வேண்டும்.

6. தென்காசி முதல் தாம்பரம் வரை விரைவில் புதிய வந்தே பாரத் இரயில் சேவையை தொடங்க வேண்டும்.

7. சங்கரன்கோவில் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துதல்.

மேற்கண்ட கோரிக்கைகளை விரைந்து பரிசீலனை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அமைச்சரிடம் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மனு அளித்து வலியுறுத்தினார். அதற்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர், கோரிக்கைகளை அனைத்தும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!