இந்திய எலும்பியல் சங்கத்தின் (IOA) எலும்பு மற்றும் மூட்டு வாரம் 2026-ஐ முன்னிட்டு, 3-ஆம் நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலகத்தில் நடைபெற்றது. இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலக பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலக பணியாளர்களை என சுமார் 50 பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சரியான உடல் நிலை (Posture), அலுவலகப் பணியின் போது கடைப்பிடிக்க வேண்டிய உடல் அமைப்பு, நீண்ட நேரம் கணினி மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதால் ஏற்படும் முதுகு மற்றும் கழுத்து வலிகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் டாக்டர் ஆர். ஜெஸ்லின் பேசுகையில், “எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தினசரி உடற்பயிற்சி, சரியாக அமர்ந்து பணி செய்யும் முறை, பணியிடத்தில் கடைபிடிக்க வேண்டிய செயல்கள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை அனைத்தும் நீண்ட காலம் நாம் எலும்பு மூட்டு தொந்தரவு இல்லாமல் வாழ்வதற்கு கடைபிடிக்க வேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியின் இறுதியில், எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் ஏற்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் எலும்பியல் நிபுணர்கள் மது, ரவிச்சந்திரன், முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு எலும்பு ஆரோக்கியம் குறித்து விளக்கினார்கள். இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலர்கள் எலும்பு மூட்டு பிரச்சனைகள் குறித்து விரிவாக கேட்டு அறிந்து கொண்டனர்.
IOA எலும்பு மூட்டு பாதுகாப்பு வார விழா; ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவர்கள்..


எலும்பு மற்றும் மூட்டு வாரம்–2026-இன் 4-ஆம் நாளையொட்டி, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில், நெல்லை ஆர்த்தோ கிளப் எலும்பு முறிவு மருத்துவர்கள் சார்பாக, ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட நேரம் வாகனம் ஓட்டுபவர்கள் உடல் நிலையை சரியாகப் பராமரித்து, இடையிடையே ஓய்வு எடுத்து, தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் எலும்பு மற்றும் மூட்டு பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் இரு சக்கர வாகன ஓட்டிகள், தலைக் கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆட்டோ, பேருந்து ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.