23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல அரசுப் பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல அரசுப் பேருந்து வசதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

எழுதியவர்: Baker BAker August 4, 2026, 9:51 am

அரசு பேருந்து இல்லாததால் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் ஆபத்தான பயணம்; மாணவர்களை மனு அளிக்க அழைத்து வந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியரின் கடும் கண்டிப்பு – கல்வி பாதிக்கக் கூடாது என அறிவுறுத்தல்

 

 

 

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட திருசிலுவைபுறம் உள்ளிட்ட ஒன்பது கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், தங்கள் பகுதிகளுக்கு அரசு பேருந்து வசதியை நிரந்தரமாக ஏற்படுத்தித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

 

மனுவில், போதுமான அரசு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள் தினந்தோறும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்யும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தினசரி போக்குவரத்து செலவு பெரும் சுமையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் அரசுப் பேருந்துகளை முறையாக இயக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும், பல ஆண்டுகளாக இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து மனுக்கள் அளித்தும், சில மாதங்கள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு பின்னர் சேவை நிறுத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் கிராம மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

இதனையடுத்து மாணவர்களுடன் மனு அளிக்க வந்தவர்களிடம் மாவட்ட ஆட்சியர், பள்ளி மாணவர்களை கல்வி நேரத்தில் மனு அளிக்க அழைத்து வந்தது தவறான செயல் என்றும், மாணவர்களின் கல்வியை எந்த சூழ்நிலையிலும் பாதிக்கக் கூடாது என்றும் கடுமையாக அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரடியாக கிராமத்திற்கு வந்து மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும், மாணவர்களை போராட்டம், ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுத்தாமல், அவர்களின் கோரிக்கைகளை பெற்றோர், பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் அரசிடம் கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

 

மாணவர்களுடன் வந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை சி எஸ் ஆர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறையிடம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக தகவல்கள்  

வெளியாகி உள்ளது

 

 

மேலும் கல்வி கற்கும் மாணவர்கள் எந்த சூழ்நிலையிலும் வகுப்புகளைத் தவிர்த்து மனு அளிக்க அழைத்து வந்தது குற்றமாகும் மாணவர்களுக்கு கல்வி அடிப்படை நோக்கமாகவும் எனவே மாணவர்கள் இது போன்ற செயல்பாடுகளுக்கு யாரும் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார் 

 

 

அதே நேரத்தில், மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்ல தேவையான போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.

 

எனவே, திருசிலுவைபுறம் உள்ளிட்ட ஒன்பது கிராம மக்களின் நீண்டகால அரசுப் பேருந்து கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து உடனடியாக ஆய்வு செய்து, பள்ளி நேரங்களில் நிரந்தர பேருந்து சேவையை ஏற்படுத்த தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!