தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக கல்லீரல் அழற்சி தின கருத்தரங்கம் நடந்தது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளரும், தமிழ்நாடு அரசு டாக்டர் சங்க மாநில செயலாளருமான மருத்துவர் ஜெஸ்லின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கல்லீரலின் செயல்பாடு, பயன்பாடு அதில் ஏற்படும் நோய்கள், நோய் தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் என்ற தலைப்பின் கீழ், தென்காசி மாவட்ட மருத்துவர்கள் உரை ஆற்றினார்கள். மருத்துவர்கள் பாலகணேஷ் நித்திஷ், மகேஷ், காவியா, தண்டபாணி, சங்கரி, மற்றும் பல மருத்துவர்களும் உரை நிகழ்த்தினர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என சுமார் 150 மருத்துவர்கள் கருத்தரங்ம் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.
கருத்தரங்க நிகழ்ச்சியை தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையும், தென்காசி அரசு டாக்டர்கள் சங்கமும் இணைந்து நடத்தியது. அனைத்து ஏற்பாடுகளையும் செயலாளர் மருத்துவர் நிதிஷ் செய்திருந்தார். நிகழ்வில், தென்காசி அரசு டாக்டர் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முகமது இப்ராகிம், இணை இயக்குனர் நலப்பணிகள் பொறுப்பு மருத்துவர் கீதா மற்றும் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும், கருத்தரங்கில் உரையாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும், இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த பணியாளர்களுக்கும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் நன்றி கூறினார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.