24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபர் மீட்பு – 7 பேரை கைது செய்த திருப்புல்லாணி காவல்துறை.!

24 மணி நேரத்தில் கடத்தப்பட்ட நபர் மீட்பு – 7 பேரை கைது செய்த திருப்புல்லாணி காவல்துறை.!

எழுதியவர்: Baker BAker August 2, 2026, 9:21 pm

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தலைமையில் துரித நடவடிக்கை; கடத்தல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷேக் நஸ்ருதீன் என்பவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், திருப்புல்லாணி காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விரைவான விசாரணையின் மூலம், கடத்தப்பட்ட ஷேக் நஸ்ருதீன் 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய நபில் அகமது, முகம்மது நௌபல் அலி, சாகுல் ஹமீது, முகமது ரக்கீம், அப்துல் ரகுமான், செய்யது சிபாயுதீன் மற்றும் சதாம் உசேன் ஆகிய 7 பேர் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட எஸ் பி சந்தீஷ் தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!