திருவாடானை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடி மாத முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
விழாவையொட்டி ஆஞ்சநேயப் பெருமானுக்கு மங்கலப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்கள், வெற்றிலை மற்றும் துளசி மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு வழிபாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, ஆஞ்சநேயப் பெருமானை தரிசித்து அருளாசி பெற்றனர். குடும்ப நலன், ஆரோக்கியம் மற்றும் வாழ்வில் வளம் பெருக வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளையும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து, கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதங்களைப் பெற்றுச் சென்றனர். ஆடி சனிக்கிழமையை முன்னிட்டு கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து, பக்தி பரவசமான சூழல் நிலவியது.




You must be logged in to post a comment.