ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் செயல்பட்டு வரும் காமராஜர் பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்து வருவதால், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இப்பேருந்து நிலையம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், பல இடங்களில் தரைத்தளம் பெயர்ந்து சேதமடைந்துள்ளது.
குறிப்பாக, தரைத்தளத்தில் பதிக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருப்பதால், பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளின் டயர்கள் கிழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்து ஓட்டுநர்களும், பேருந்து உரிமையாளர்களும் அச்சத்துடனும் சிரமத்துடனும் பேருந்துகளை இயக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த பேருந்து நிலையத்திற்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லும் நிலையில், பெரும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே சேதமடைந்த தரைத்தளத்தை உடனடியாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.