24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய வரவு… ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’ திறப்பு விழா.!

கீழக்கரையில் புதிய வரவு… ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’ திறப்பு விழா.!

எழுதியவர்: Baker BAker August 2, 2026, 9:38 am

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஆடை வாங்குவதற்கும், தரமான தையல் சேவையை ஒரே இடத்தில் பெறுவதற்கும் புதிய முகவரியாக உருவெடுத்துள்ள ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’ நிறுவனத்தின் திறப்பு விழா, கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, வடக்கு தெரு பள்ளி எதிரே உள்ள அனஸ் காம்ப்ளக்ஸில் உற்சாகமான  நடைபெற்றது.

 

நிறுவனத்தின் உரிமையாளர் அப்துல்மாலிக் தலைமையில் நடைபெற்ற விழாவில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் பி. அப்துல் ஹமீது கலந்து கொண்டு நிறுவனத்தை திறந்து வைத்து, அதன் வளர்ச்சிக்கும், வாடிக்கையாளர் சேவைக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

 

முன்னதாக, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூசி இறைவசனம் ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

 

விழாவில் எஸ்டிபிஐ கட்சியின் நகர் செயல் தலைவர் முஹைதீன் பாரூக், செயலாளர் கீழை அஸ்ரப், பாரூக் ராஜா முஹம்மது, அஹமது நதீர், தொகுதி செயற்குழு உறுப்பினர் பக்ருதீன் அலி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் திமுகவைச் சேர்ந்த பிரதிநிதிகள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 

புதிய நிறுவனத்தின் மூலம் தரமான ரெடிமேட் ஆடைகள், சிறந்த தையல் சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

விழாவின் நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புதிய தொழில் முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’, கீழக்கரை மக்களின் வரவேற்பைப் பெற்று சிறப்பாக வளர வேண்டும் என பொதுமக்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!