24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாதாந்திர மின் பராமரிப்பு பணி; இன்று மின்தடை..

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; இன்று மின்தடை..

எழுதியவர்: Abubakker Sithik August 1, 2026, 3:46 am

திருநெல்வேலி கிராமப்புற கோட்டம்: ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் உப மின் நிலையங்களில் 01.08.2026 சனிக்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக் குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள் புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஆண்டிபட்டி, ஐந்தான் கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன் கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான் குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப் பட்டிணம், பூலான் குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் தெரிவித்துள்ளார்.

தென்காசி கோட்டம்: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உபமின் நிலையங்களில் 01.08.2026 சனிக்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், ராமச்சந்திர பட்டணம், மேல மெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையநேரி, இரட்டைகுளம், சுந்தர பாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இத்தகவலை தென்காசி கோட்ட செயற் பொறியாளர் A. ஸ்ரீ வனஜா தெரிவித்துள்ளார்.

வள்ளியூர் கோட்டம்: 110-KV பணகுடி துணைமின் நிலையத்தில் 01.08.2026 சனிக்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால்,  பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல் கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன் குளம், கலந்தபனை, கடம்பன் குளம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் தா. வளன் அரசு தெரிவித்துள்ளார்.

கல்லிடைக் குறிச்சி கோட்டம்: ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம், துணைமின் நிலையங்களில் 01/08/2026 சனிக்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால், ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஒ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாகுடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை அம்பாசமுத்திரம், ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார் கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி. மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம். கல்லிடைக் குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி. கடையம், கட்டேரிபட்டி, முதலியார் பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், இரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடனூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர், கோவிந்த பேரி ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் பாதுகாப்பு கருதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00மணி வரை நிறுத்தி வைக்கப்படும். இத்தகவலை கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற் பொறியாளர் மா.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார். 

சங்கரன் கோவில் கோட்டம்: சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உபமின் நிலையத்தில் 01.08.2026 (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சங்கரன் கோவில் நகர்பகுதி, என்.ஜி.ஓ.காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், இராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம் முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டுர், அழகாபுரி, பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம் கோவில்பட்டி, அருகன் குளம்புதூர், செந்தட்டியாபுரம், எட்டிச்சேரி, தென்மலை, அ. சுப்பிரமணியாபுரம், இடையான்குளம், முறம்பு, ஆசிலாபுரம், கூனங்குளம், பருவக்குடி, பந்தபுளி, பி.ரெட்டியாபட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம் ஆகிய ஊர்களுக்கு காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இத்தகவலை சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் P. ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.

கடையநல்லூர் கோட்டம்: 110/11KV புளியங்குடி மற்றும் 110/33-11KV வீரசிகாமணி துணைமின் நிலையங்களில் 01.08.2026 சனிக் கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்,  புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலி பட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்ட நல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளி குளம், தலைவன் கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி, மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி, வீரசிகாமணி, பட்டாடைகட்டி, அருணாச்சலபுரம், அரியநாயகிபுரம், பாம்புக்கோவில், வென்றிலிங்கபுரம், திருவேட்டநல்லூர், திருமலாபுரம், வடநத்தம்பட்டி, சேர்ந்தமரம் மற்றும் நடுவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா.கற்பகவிநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம்:  110/33-11KV பழைய பேட்டை மற்றும் 33/11 KV பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் 01.08.2026 சனிக்கிழமை (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, கோடீஸ்வரன் நகர், சாஸ்திரி நகர், தீன்நகர், திருமங்கை நகர், செந்தமிழ்நகர், பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன், SN ஹை ரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, சுந்தரதெரு, பாரதியார் தெரு, C.N. கிராமம், குறுக்குத்துறை, கருப்பன் துறை, டவுண் கீழ ரதவீதி, போஸ் மார்க்கெட், A.P. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்திமுடுக்கு தெரு, நயினார் குளம் ரோடு, சத்தியமூர்த்தி தெரு, போத்தீஸ் நயினார் குளம், மார்க்கெட், வ.உ.சி தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில், தெற்குதெரு, ராம்நகர் மற்றும் ஊர் உடையான் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

 

 

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!