23 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ரூ.1.50 கோடி மெத்தபெட்டமின் பறிமுதல் .!ரகசிய தொழிற்சாலையை கண்டுபிடித்து 9 பேரை கைது செய்த போலீசார் – மாவட்ட எஸ் பி சந்தீஷ் பாராட்டு.!

ராமநாதபுரத்தில் ரூ.1.50 கோடி மெத்தபெட்டமின் பறிமுதல் .!ரகசிய தொழிற்சாலையை கண்டுபிடித்து 9 பேரை கைது செய்த போலீசார் – மாவட்ட எஸ் பி சந்தீஷ் பாராட்டு.!

எழுதியவர்: Baker BAker July 31, 2026, 3:44 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த உயர்ரக மெத்தபெட்டமின் (Methamphetamine) போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையை மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக கண்டுபிடித்து, ரூ.1.50 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்ட காவல்துறையின் துரிதமான நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து 1 கிராம் மெத்தபெட்டமின் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக காரிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இளையான்குடி பகுதியில் உள்ள லேத் பட்டறையின் உள்பகுதியில் மறைமுகமாக அறை அமைத்து மெத்தபெட்டமின் தயாரித்து வந்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்தி, தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் ரூ.1.50 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், போதைப்பொருள் தயாரிப்பு, விற்பனை மற்றும் நிதியுதவி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ள போலீசார், இந்தக் கும்பலுடன் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

விசாரணையில், தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை போதைப்பொருள் தயாரிப்பு நடைபெற்றதும், 15 நாட்களுக்கு சுமார் 3 கிலோ மெத்தபெட்டமின் தயாரித்து விற்பனை செய்து வந்ததும், இந்த சட்டவிரோத நடவடிக்கை கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்பு உபகரணங்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் செய்தியாளர்களிடம் காட்சிப்படுத்தி வழக்கின் விவரங்களை விளக்கினார். சிறப்பாக செயல்பட்டு இந்த பெரிய போதைப்பொருள் வலைவீசி பிடித்ததுமைக்காக காவல்துறை அதிகாரிகளை மாவட்ட எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாகவும், சமூகத்தை பாதுகாக்க இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!