24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடும்ப பிரச்சினை காரணமாக ராமநாதபுரத்தில் இரட்டை கொலை.!

குடும்ப பிரச்சினை காரணமாக ராமநாதபுரத்தில் இரட்டை கொலை.!

எழுதியவர்: Baker BAker July 30, 2026, 11:23 pm

 மனைவி மற்றும் மாமியாரை கொலை செய்துவிட்டு கணவர் போலீசில் சரணைடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  ராமநாதபுரம் வைகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது அவரது மாமியாரும் வெளிநாட்டில் அரசு ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரிகிறது

 இந்த நிலையில் செல்லமுத்துவிற்கும் அவரது மனைவி சர்மிளாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது

இன்று காலை செல்லமுத்து விற்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிப்போய் கோபம் அடைந்த செல்லமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து

மனைவி சர்மிளாவையும் மாமியார் பத்மாவதியையும் சரமாரியாக வெட்டிவிட்ட தப்பி உடைய நிலையில் சில மணி நேரங்களில் நேரடியாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அரிவாளுடன் சென்று சரணடைந்துள்ளார்

 இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையிலான போலிசார் நேரில் வந்து ஆய்வு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்

  குடும்ப பிரச்சினை காரணமாக இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது முதற்கட்ட விசாரணையில் செல்லமுத்துவின் மனைவிக்கு கள்ள தொடர்பு இருந்து வந்ததாகவும் இதனாலே பிரச்சனை ஏற்பட்டு தற்போது கொலையில் முடிந்ததாகவும் தெரிய வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!