ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சினேகவல்லி தாயார் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலில் (பெரிய கோவில்), சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் சுவாமி தரிசனம் செய்தார்.
திருக்கோவிலுக்கு வருகை தந்த நீதிபதி வேல்முருகனை கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு, இறைவனின் அருள் பிரசாதமும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், திருவாடானை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரேவதி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி ஆண்டனி ரிஷாந்தேவ், கோவில் நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நீதிபதியின் வருகையையொட்டி திருக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. அவற்றை திருவாடானை காவல் ஆய்வாளர் வாசிவம் தலைமையிலான காவல்துறையினர் மேற்கொண்டனர்.
பழமை, பெருமை மற்றும் ஆன்மிகச் சிறப்பு மிக்க திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




You must be logged in to post a comment.