இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மீன் மார்க்கெட்டில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை சார்பில்
வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் எம். ஜெயராஜ் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் மற்றும் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில், 7.5 கிலோ கெட்டுப்போன மீன்கள் கண்டறியப்பட்டு அதிகாரிகளால் பறிமுதல் செய்து அளித்தனர்
மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ரசாயனம் கலந்த மீன்கள் எதுவும் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், மீன் விற்பனையாளர்கள் உரிய உரிமம் பெற்றுள்ளனரா என்பதும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
கெட்டுப்போன அல்லது மனித நுகர்விற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சட்டப்படி அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஆய்வில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மேற்பார்வையாளர் செல்வகுமார், கடல் அமலாக்கப் பிரிவு காவலர் காதர் இபுராஹிம் மற்றும் இராமநாதபுரம் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









You must be logged in to post a comment.