ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கோபியின் மனைவி விஜி (38). தம்பதியருக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று இரவு விஜி, தான் வேலை செய்து வந்த வீட்டிற்குச் சென்று, கணவருடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை குறித்து அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததுடன், ஒரு நாள் மட்டும் அங்கு தங்க அனுமதி கேட்டதாகத் தகவல். பின்னர் அவர் அறைக்குள் சென்ற நிலையில், சிறிது நேரத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தொண்டி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழப்புக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவுகளுக்குப் பிறகே சம்பவத்தின் முழு விவரங்கள் தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பிரச்சினைகளால் மனஅழுத்தத்திற்கு ஆளாகும் நபர்களுக்கு உரிய ஆலோசனை, பாதுகாப்பு மற்றும் மனநல ஆதரவு சேவைகள் எளிதில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.




You must be logged in to post a comment.